முகமது நபியை அவமதித்த கிறிஸ்தவருக்கு மரண தண்டனை

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்துக்கு எதிராக கருத்து கூறியதாக கிறிஸ்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் மதம் குறித்து தவறாக பேசுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் அந்நாட்டை சேர்ந்த நதீம் ஜேம்ஸ் என்பவர் முகமது நபிக்கு எதிராக கருத்து கூறியதாக அவரது நண்பர் பொலிசில் கடந்தாண்டு புகார் அளித்திருந்தார்.

இதன்பேரில் நதீம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக நதீமின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers