கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற உலகின் வயதான நபர் மரணம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

உலகின் வயதான நபராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த Violet Mosse-Brown தனது 117வது வயதில் மரணமடைந்துள்ளார்.

ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர் Violet Mosse-Brown (117), இவர் கடந்த 1900ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் திகதி பிறந்தார்.

உலகில் வாழும் வயதான நபர் என Brown-ன் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்த வருடத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில் Brown நேற்று மரணமடைந்தார். அவரின் மரணத்துக்கு ஜமைக்கா பிரதமர் Andrew Holness தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், உலகின் வயதான மனிதர் Violet Mosse-Brown 117 வயதில் மரணமடைந்துள்ளார், அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கடவுள் கிருபையால் தான் வாழ்வதாகவும், தனது வயதை நினைத்து பெருமைப்படுவதாகவும் Brown கடந்த வருடம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

Brown மரணமடைந்த அதே 117 வயதில் உலகின் வயதான நபராக முன்னர் திகழ்ந்த இத்தாலிய பெண் Emma Morano கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers