வடகொரிய மக்களை மயக்கத்தில் வைத்திருப்பார்: கிம் பற்றி நிபுணர்கள் கருத்து

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தனது நாட்டு மக்களை சந்தோஷப்படுத்துவதற்காகவே தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை அங்குள்ள மக்கள் கடவுளுக்கு நிகராக பார்க்கின்றனர். இதனாலையே அவர்களை மகிழ்விக்கும் பொருட்டு கிம் ஜோங் தொடர்ந்து ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

வடகொரியாவில் ஏவுகணை சோதனை மேற்கொள்வதை கூட பெரியத் திரைகளில் தங்கள் நாட்டு மக்களுக்கு அரசு நேரடியாக ஒளிபரப்புகிறது.

மட்டுமின்றி பொருளாதாரத் தடைகள் காரணமாக வடகொரியாவுக்கு பில்லியன் டொலர்களில் வருவாய் இழப்பு ஏற்படும் நிலையிலும் இதுபோன்ற சோதனைகளை அந்தநாடு மேற்கொள்கிறது.

கிம் ஜோங் உன் தொடர்ந்து ஏவுகணை சோதனை மேற்கொண்டு வந்தாலும் போர் தொடுக்கும் நிலையில் அந்த நாடு இல்லை என நிபுணர்கள் கருதுகின்றனர்.

காரணம், குவாம் தீவு மீது வடகொரியா தாக்குதலை ஏவினால் அடுத்த சில நாட்களிலேயே வடகொரியாவை அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் அழித்துவிடும் என்பது அவருக்கே தெரியும் என்கின்றனர்.

கடந்த முறை ஏவுகணை சோதனை மேற்கொண்ட போது, அமெரிக்காவுடன் போர் ஏற்படும் சூழலை உருவாக்கினால் நீங்கள் தனியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும்' என்று வடகொரியாவை சீனா கடுமையாக எச்சரித்தது.

கிம்மின் தாத்தாவும் முன்னாள் அதிபருமான கிம் ஜாங்கைதான் வடகொரிய மக்கள் மிகவும் நேசித்தனர். கிம் ஜாங் மீதுள்ள மயக்கத்தில்தான் கிம் ஜாங் வுன் மீதும் அதிக பற்று வைத்துள்ளனர்.

வடகொரிய மக்களை அமெரிக்காவுடன் மோதல் என்கிற மயக்கத்தில் கிம் ஜாங் வைத்திருப்பாரேத் தவிர ஒரு போதும் மயங்கி போரில் இறங்கமாட்டார்.

தங்கள் நாட்டு மக்களை சந்தோஷப்படுத்த அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபடுவார். வடகொரிய ராணுவத்தினர் அதைப் பயன்படுத்தி ஊழலில் திளைக்கின்றனர்' என்று கூறுகின்றனர் தென் கொரிய நிபுணர்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...