உலகில் கைவிடப்பட்ட முக்கிய நகரங்களின் பட்டியல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அரசியல் மற்றும் சமூக காரணங்களால் முக்கிய நகரங்கள் பல உலக அளவில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

சைப்ரஸ் தீவின் வரோஷா நகரம் 1960 காலகட்டங்களில் திரைப்பட உச்ச நட்சத்திரங்கள் பலரது விடுமுறை கொண்டாட்டங்களுக்கு முக்கிய தலமாக விளங்கியது.

ஆனால் 1974 ஆம் ஆண்டு துருக்கி ராணுவம் இந்த நகரத்தை கைப்பற்றியதுடன் அங்குள்ள குடிமக்களையும் சுற்றுலாப்பயணைகளையும் வெளியேற்றியது. அதன் பின்னர் துருக்கி ராணுவத்தின் கீழ் இருக்கும் இந்நகரத்தில் பொதுமக்கள் எவரையும் இதுவரை அனுமதிக்கப்பட்டதில்லை.

ஆஸ்திரியாவின் Döllersheim கிராமமானது 1938 ஆம் ஆண்டில் ஹிட்லரின் பார்வை படும்வரை முக்கிய சுற்றுலாதலமாக விளங்கியது. குறித்த கிராமத்தை ராணுவத்திற்கான பயிற்சி முகாமாக மாற்றிய ஹிட்லர் அங்குள்ள பொதுமக்களை மிரட்டி வெளியேற்றினார். பின்னர் யுத்தத்தால் சிதைந்த அந்த கிராமம் இன்றுவரை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக இருந்து வருகிறது.

நமீபியாவின் Kolmanskop நகரில் 1908 ஆம் ஆண்டு ஜேர்மானியர் ஒருவர் வைரம் ஒன்றை கண்டெடுக்கும் வரை மக்கள் அங்கு நிம்மதியாக வாழ்ந்து வந்தனர்.

மருத்துவமனை, பாடசாலைகள், சூதாட்ட விடுதிகள் என சுற்றுலாப்பிரியர்களுக்கு ஏற்ற பகுதியாக விளங்கிய இந்த நகரம், ஜேர்மன் சுரங்கத்தொழிலாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, பின்னர் தேவை முடிந்த பின் கைவிடப்பட்டது.

இத்தாலியின் Craco நகரம் இயற்கை பேரிடால் மக்கள் வாழ தகுதியற்ற நிலைக்கு தள்ளப்பட்டது. இங்குள்ள பேராலயம் மட்டும் தற்போது பிரபலமான திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்படுகிறது.

துருக்கியின் Kayaköy கிராமம் ஒருகாலத்தில் 2000 கிரேக்க குடிமக்களால் செழிப்புடன் இருந்தது. ஆனால் 1923 ஆம் ஆண்டு கிரேக்கத்துடன் துருக்கி மேற்கொண்ட யுத்தத்தால் குறித்த கிராம மக்கள் கூட்டமாக வெளியேறி தற்போது கைவிடப்பட்ட நிலையில் சிதைந்து காணப்படுகிறது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் அமைந்துள்ள Centralia நகரம் ஒருகாலத்தில் சுரங்கத்தொழிலாளர்களால் நிரம்பி வழிந்தது. 1960ல் ஏற்பட்ட தீவிபத்தால் அங்குள்ள மக்கள் மொத்தமும் கூட்டமாக வெளியேறினர். தற்போது வெறும் 13 பேர் மட்டுமே அங்கு வசித்து வருகின்றனர்.

உக்ரைன் நாட்டின் Pripyat கிராமம் 1986 ஆம் ஆண்டு வரை 49,000 ஜனத்தொகையுடன் அருகாமையில் உள்ள ரசாயன ஆலைகளில் வேலை வாய்ப்புடன் செழிப்புடன் இருந்தது.

ஆனால் 1986 ஏப்ரல் 27 ஆம் திகதி Chernobyl அணு உலையில் ஏற்பட்ட விபத்து காரணம் அங்குள்ள மொத்த மக்களும் வெளியேறி இன்று அங்கு வெறும் புல் பூண்டுகள் மட்டுமே உள்ளது.

ஜப்பானின் ஹஷிமா தீவு நீருக்கடியில் நிலக்கரி சுரங்கங்கள் கொண்ட பகுதி. 5,000 சுரங்க தொழிலாளர்கள் வரை இங்கு குடியிருந்து வந்தனர். இங்குள்ள சுரங்கமானது 1974ல் மூடப்பட்டதும் குறித்த பகுதியானது கைவிடப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers