அமெரிக்கா-ரஷ்யா நடத்திய தாக்குதல்: பொதுமக்கள் பலர் உயிரிழப்பு

Report Print Santhan in ஏனைய நாடுகள்
663Shares
663Shares
lankasrimarket.com

சிரியாவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் சுமார் 39 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அங்கிருக்கும் தீவிரவாதிகளை அழிப்பதற்கு அந்நாட்டுடன் இணைந்து அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் தற்போது வரை 3-லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகவும், இது போன்ற தாக்குதல்களின் போது பொதுமக்கள் பலர் பாதிப்புக்குள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிரியாவின் டேர் எஸ்ஸர் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் ரஷ்ய இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்களில் 39 பேர் கொல்லப்பட்டனர் என சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்