சக்திவாய்ந்த அணு ஆயுதத்தை உருவாக்கிய வடகொரியா: வைரலாகும் புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
541Shares
541Shares
ibctamil.com

சக்திவாய்ந்த அணு ஆயுதத்தை புதிதாக உருவாக்கியுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் அரசு செய்தி முகமை அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் புதிய ஹைட்ரஜன் வெடிகுண்டு ஒன்றை சோதனை செய்வது போன்ற படங்களை வெளியிட்டுள்ளது.

ஆனால், இதை தன்னிச்சையான முகமைகள் எதுவும் இதுவரை உறுதி செய்யவில்லை.

அணு ஆயுத நிலையத்தில் உள்ள விஞ்ஞா​னிகளை சென்று பார்த்த கிம் ஜாங் ஆயுத தயாரிப்பு தொடர்பான பணிகளை பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அணு ஆயுதத்தை பாலிஸ்டிக் ஏவுகணை மீது ஏற்றிச் செல்லமுடியும் என்றும் வட கொரியா கூறியுள்ளது.

அணு ஆயுத செயல்பாடுகளில் வடகொரியா முன்னேறியிருந்தாலும், ஏவுகணை மீது ஏற்றிச்செல்லும் அளவு சிறிய அணு ஆயுதத்தை அவர்கள் உண்மையிலேயே உருவாக்கியுள்ளார்களா என தெளிவாக தெரியவில்லை.

தொடர் அணு ஆயுத சோதனைகளால் உலக நாடுகளை வடகொரியா பீதியில் ஆழ்த்தி வரும் நிலையில், இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்