உலகின் மிகவும் உயரமான கட்டிடங்களில் ஒன்றான துபாயில் உள்ள டார்ச் டவரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துபாயின் Marina பகுதியில் சுமார் 1,105 அடி உயரம் கொண்ட, உலகில் மிகவும் உயரமான கட்டிடங்களில் ஒன்றான Torch டவரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இது உள்ளூர் நேரப்படி காலை 1 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.
கட்டிடத்தின் 9-வது மாடியில் இருந்து தீப்பற்றி எரிந்து கொண்டு அப்படியே அடுத்தடுத்து பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Dubai torch tower is currently burning in Dubai Marina @gulf_news 😱 pic.twitter.com/HvxxnOXSuk
— PepGenesio (@Mamad_ElShabazz) August 3, 2017
திடீரென்று ஏற்பட்ட இந்த தீ விபத்தை அறிந்து, தீயணைப்பு படையினர் அங்கு விரைந்துள்ளதாகவும், கட்டிடத்தில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பது குறித்து எந்த ஒரு தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை என்றும் முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#dubai#fire#marina#torch#building pic.twitter.com/hHIKi4wLE0
— mira majbour🎀 (@miramajbour) August 3, 2017
டார்ச் டவர் உலகின் மிகவும் உயரமான கட்டிடங்களில் ஒன்று எனவும், 1,105 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடம் 2011-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது என்றும் பிப்ரவரி 2015-ஆம் ஒரு தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதில் யாருக்கும் எந்த ஒரு பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dubai Civil Defence has successfully evacuated the Torch Tower and is working to bring the fire under control
— Dubai Media Office (@DXBMediaOffice) August 3, 2017
மேலும் இச்சம்பவம் தொடர்பான வீடியோவை அங்கிருக்கும் மக்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
அவர்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.