இஸ்லாமிய கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வரும் நாடுகளில் முக்கியமான நாடு சவுதி அரேபியா.
இந்நிலையில் குறிப்பிட்ட பகுதிகளில் விதிமுறைகளை தளர்த்த சவுதி அரசு திட்டமிட்டுள்ளது.
ஏனெனில் சவுதியில் உள்ள வடமேற்கு கடற்பகுதியை சுற்றுலாத் தளமாக்கும் வகையில் அரசு முடிவு செய்துள்ளது.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், சிகப்பு கடல் ரிசார்ட் என்ற பகுதியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு, கடற்பரப்பையொட்டியுள்ள 125 மைல் பகுதி ஒதுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டங்களுக்கு இணையான முறையில் அங்கு சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமாம். எனவே, பெண்கள் தாங்கள் விரும்பும் உடையணிந்து கொள்ளமுடியும்.
குறிப்பாக, சவுதி அரேபியாவில், கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் இனி பிகினி கூட அணிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.