ஏமனில் 10 லட்சம் குழந்தைகள் இறக்க போகும் அபாயம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
132Shares

ஏமனில் பத்து லட்சம் குழந்தைகள் பட்டினி மற்றும் காலரா நோயால் இறக்க போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேவ் த சில்ரன் என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏமனில் உள்ள குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு காலரா நோய் வந்தால் அவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு, ஐந்து வயதுக்கும் குறைவான இரண்டு லட்சம் ஏமன் குழந்தைகள் பட்டினியால் இறக்கும் ஆபத்து இருப்பதாகவும் சேவ் த சில்ரன் தெரிவித்துள்ளது.

இரண்டு வருடமாக நடந்த உள்நாட்டுப் போரின் காரணமாக ஏமன் பஞ்சத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருப்பதுடன், நாட்டின் சுகாதார அமைப்பு முற்றிலும் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்