ரஷ்ய தூதரகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

Report Print Gokulan Gokulan in ஏனைய நாடுகள்
223Shares

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்படி, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்ய தூதரக வளாகத்திற்குள் நான்கு மோட்டார் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், ஒரு மாதத்திற்கும் குறைவான காலப்பகுதியில் இரண்டாவது முறையாக ரஷ்ய தூதரகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி ரஷ்ய தூதரகம் மீது முதல்தடவையாக பயங்கரவாதிகள் மோட்டார் தாக்குதல் நடத்தியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி தாக்குதலில் தூதரக அலுவலகம் குறிப்பிடத்தக்க அளவு சேதமடைந்துள்ள போதிலும் உயிரிழப்புக்கள் நேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டமாஸ்கஸ் மற்றும் பிற சிரிய நகரங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்தும் தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்கள் பயங்கரமானது என்றும் இத்தாக்குதல்களின் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ரஷ்ய தூதரகம் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்