அழகான முகம் கொண்ட வட கொரியா அதிபர் ஆபத்தான பொம்மைகளுடன் விளையாடுகிறார்: பிலிப்பைன்ஸ் அதிபர்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
373Shares

வடகொரியா தொடர்ந்து நடத்தி வரும் ஏவுகணை சோதனைகளால் அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து கண்டன குரல்கள் எழுப்பி வருகின்றன. அமெரிக்கா புதிதாக பொருளாதார தடைகளையும் வடகொரியா மீது விதித்துள்ளது.

எனினும் இதனை எல்லாம் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் அதிபர் டியுடெர்ட் கூறியதாவது, வட கொரியா தனது அணுசக்தி யுத்தத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இல்லையென்றால், மண் வளங்கள் வீழ்ச்சியடைந்து நம்மால் எதையும் செய்ய இயலாது.

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஒரு வெறிப்பிடித்தவர். அவரின் அணுஆயுத சோதனைகள் ஆசியாவை அழிக்க போகிறது. அழகான முகத்தையுடைய கிம் ஆபத்தான பொம்மைகளுடன் விளையாடி கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்