கடற்கரையில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த விமானம்: கடலுக்குள் ஓடிய மக்கள்

Report Print Basu in ஏனைய நாடுகள்
661Shares

போர்த்துக்கல் கடற்கரையில் மக்கள் கூட்டத்திற்குள் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் 8 வயது குழந்தை மற்றும் 50 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலைநகர் லிஸ்பன், Caparica பகுதியில் உள்ள கடற்கரையிலே இச்சம்பவம் நடந்துள்ளது. கடற்கரையில் நூற்றுக்கணக்கான மக்கள் இருந்த போது திடீரென சிறிய ராக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தை கண்ட மக்கள் கடலில் ஓடி உயிர் தப்பித்துள்ளனர். எனினும், இந்த விபத்தில் பெற்றோர்களுடன் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமி மற்றும் 50 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இதில், சிறுமியின் பெற்றோர் எந்த காயமும் ஏற்படாமல் தப்பித்துள்ளனர். மேலும், விமானத்திலிருந்த இருவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என சம்பவயிடத்திலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் விமானத்தில் இருந்த இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக கடற்கரையில் தரையிறக்க நேரிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்