எகிப்து தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

எகிப்தில் சினாய் பகுதியில் 26 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. 60 ராணுவ வீரர்கள் இருந்த முகாம் மீது, யூன் 7ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 26 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

சீனாய் தொலைதூரப் பகுதியாகவும், அதிகம் முன்னேற்றமடையாத பரந்த நிலப்பரப்பையும் கொண்டுள்ளதால், தீவிரவாதிகளுக்கு சாதகமான பகுதியாக மாறியுள்ளது.

கடந்த சில மாதங்களாக ஐ.எஸ் பயங்கரவாத இயக்கமானது எகிப்தின் சிறுபான்மை கிறுஸ்தவர்கள் மீது குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது. இதில் பல எண்ணிக்கையிலான மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி சில நாட்களுக்கு முன்பு நடந்த ராணுவத் தாக்குதலில் 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், இதற்கு பழிவாங்கவே இத்தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுபோன்று ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி, எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் 2 தேவாலயங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 43 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கும் ஐ.எஸ் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments