பாதுகாப்பாக இருங்கள்: சீனர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இந்தியாவில் இருக்கும் சீனர்கள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது.

இந்தியாவுக்குச் செல்பவர்கள் பத்திரமாக இருக்கும்படி தங்கள் நாட்டினருக்கு சீனா அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு நிலவரம் குறித்து அறிந்து கொண்டு பயணம் மேற்கொள்ளும்படியும் சீனா கேட்டுக் கொண்டுள்ளது.

டெல்லியில் உள்ள சீனத் தூதரகம் மூலமாக இதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எனினும் இது பயண எச்சரிக்கை அல்ல என இந்திய வெளிவிவகார அமைச்சக அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்துக்கு அருகேயுள்ள டோக்லம் பீடபூமியில் சீனா சாலை அமைப்பது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments