9 பேரின் தலைகளை வெட்டி எறிந்த தீவிரவாதிகள்: நேரில் கண்ட கிராம மக்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

கென்யாவில் தீவிரவாதிகள் ஒன்பது பேரின் தலைகளை வெட்டி எறிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவின் Lamu மாவட்டத்தில் உள்ள ஜிமா மற்றும் பன்டன்காவோ கிராமங்களுக்குள் தீவிரவாதிகள் நேற்று இரவு நுழைந்துள்ளனர்.

அங்கு நுழைந்த தீவிரவாதிகள் கிராமத்தில் இருந்த 9-பேரின் தலைகளை துண்டித்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இதை நேரில் கண்ட கிராம மக்கள் கூறுகையில், திடீரென்று வந்த தீவிரவாதிகள் சற்றும் எதிர்பார்க்காத சமயத்தில் கிராமத்தில் இருந்த மக்களை கோழி, ஆடுகளை வெட்டுவது போல் வெட்டிவிட்டு தப்பிவிட்டனர் என்று கூறியுள்ளனர்.

இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் Al-Shabaab இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் இவர்களுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments