பெண்ணின் உயிரை காப்பாற்றிய இலங்கையர்! நாடு கடத்தப்படும் அபாயம்

Report Print Vethu Vethu in ஏனைய நாடுகள்

வெளிநாடொன்றில் தங்கியிருக்கும் இலங்கையரை நாடு கடத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென் கொரியாவில் தங்கியிருக்கும் நிமல்சிறி என்பவரே நாடு கடத்தலுக்கு முகங்கொடுத்துள்ளார்.

தென்கொரியாவில் தீ விபத்து ஏற்பட்ட வீட்டிற்குள் சென்று வயோதிப பெண்ணொருவரை இலங்கையர் காப்பாற்றியதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த அனர்த்தம் கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்றது.

தீ பற்றிய வீட்டிற்குள் சிக்கிய 90 வயதுடைய வயோதிப தாயை காப்பாற்ற சென்ற நிமல்சிறி என்ற இலங்கையர் தீ காயங்களுக்குள்ளானார்.

இதன் காரணமாக உயிருக்கு போராடிய நிமல்சிறி தென்கொரிய வைத்தியசாலையில் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.

தீ காயங்களுக்கு உள்ளாகியமையால் அவர் இன்னமும் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் அவரின் சிகிச்சையின் பின்னர் நிமல்சிறி விசா காலம் நிறைவடைந்தும் தென்கொரியாவில் தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனால் நிமல்சிறியை தென்கொரியாவில் இருந்து நாடு கடத்த தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நிமல் சிறியை தொழிலை இழந்து இலங்கைக்கு நாடு நடத்தப்பட்டால் அவர் கடுமையாக மனரீதியான பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments