இவர்கள் தான் உங்களை காயப்படுத்தினார்களா? டிரம்பிடம் கேட்ட புடின்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஜேர்மனியின் Hamburg நகரில் ஜி20 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜேர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் ஜி20 மாநாட்டின் போது, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இரு நாட்டு உறவுகள் குறித்து பேசினர்.

அப்போது பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது. ரஷ்ய அதிபர் புடின், டிரம்ப்பிடம் பத்திரிக்கையாளர்களை நோக்கி இவர்கள் தானே உங்களை காயப்படுத்தியவர்கள் என்று கேட்டார்.

அதற்கு டிரம்ப் சரியாக சொன்னீர்கள், ஆமாம் இவர்கள் தான் என்னை காயப்படுத்தினார்கள் என்று கூறினார்.

இவர்கள் இதை சத்தமாக பேசவில்லை என்றாலும், அங்கிருக்கும் பத்திரிக்கையாளர்கள் காதில் விழும் படி பேசினர்.

ஏனெனில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபகாலமாக அமெரிக்க ஊடகங்கள் மீது குற்றம் சாட்டி வருகிறார்.

அமெரிக்க ஊடகங்களுக்கும், டிரம்புக்கும் மோதல் போக்கு நிலவு வருகிறது. அது தொடர்பாக டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது கண்டனப் பதிவுகளை பதிவேற்றம் செய்து வருகிறார்.

அதன் காரணமாகவே டிரம்ப்பிடம், புடின் இது போன்ற கேள்வியை கேட்டதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments