அணு ஆயுதங்களை தடை செய்யும் ஒப்பந்தம்: 120 நாடுகள் ஆதரவு!

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஐ.நா சபையின் 120 நாடுகள் ஒன்று சேர்ந்து அணு ஆயுதங்களை தடை செய்யும் ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றின.

அணு ஆயுதங்களை தடை செய்ய வேண்டும் என பல்வேறு நாடுகள் ஏற்கனவே கூறி வருகிறது. இந்நிலையில் இது சம்மந்தமான மாநாடு நடைப்பெற்றது.

இதில் அணு ஆயுதங்களை தடை செய்ய அதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என 120 நாடுகள் ஒன்று சேர்ந்து தீர்மானம் போட்டன.

பின்னர், இந்த ஒப்பந்தத்தை விவாதித்து மாநாட்டின் தலைவரான கோமேஸ் கூறுகையில், அணு ஆயுதமற்ற உலகை ஏற்படுத்த விதை விதைத்துள்ளோம்.

இதன் மூலம் நம் குழந்தைகள் அணு ஆயுதமற்ற உலகை காணும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், இந்த சட்ட நெறிமுறைக்காக உலகம் 70 ஆண்டுகளாக காத்திருக்கிறது என கூறிய கோமேஸ் உலகின் முதல் அணுகுண்டு இரண்டாம் உலகப்போரின் இறுதியில் 1945 ஆகஸ்ட் மாதம் ஹிரோஷிமா, நாகாசாகி மீது வீசப்பட்டதிலிருந்து இதற்காக காத்திருந்ததாக கூறியுள்ளார்.

120 நாடுகள் ஆதரித்துள்ள இந்த ஒப்பந்தத்தை அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக அறியப்படும் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments