இதுதான் ஒபாமாவுக்கும், டிரம்புக்கும் உள்ள வித்தியாசம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நேட்டோ நட்பு நாடு தலைவர்கள் சந்திப்பில் பிரதமரின் கையை தள்ளி விட்ட டிரம்பின் செயலுக்கும், அவர்களுடன் சிரித்து பேசி சந்தோஷமாக இருக்கும் ஒபாமாவின் செயலுக்கும் உள்ள வித்தியாசங்கள் புகைப்படம் வாயிலாக தெரியவந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது முதல் அரசு முறை சுற்றுப்பயணத்தின் போது பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்சில் நேட்டோ நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பின்னால் நடந்து வந்த டிரம்ப் திடீரென முன்னால் நடந்து சென்ற மோன்டெனெக்ரோ நாட்டின் பிரதமர் டஸ்கோ மார்கோவிச்சின் வலது பக்க கரத்தை வேகமாக தள்ளிக்கொண்டு முன்னால் வந்தார்.

இது மரியாதை இல்லாத செயலாக பார்க்கப்பட்டது, இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், இதே நேட்டோ நாடுகளின் தலைவர்களை கடந்த 2012ல் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சந்தித்தார்.

அப்போது அங்கிருந்த தலைவர்களுடன் அழகாக நின்று புகைப்படம் எடுத்து கொண்ட அவர், அவர்களுடன் மனம் விட்டு சிரித்து பேசி மகழ்ந்தார்.

இது சம்மந்தமான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இது தான் டிரம்ப் மற்றும் ஒபாமாவுக்கு இடையிலான வித்தியாசம் என இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments