பேய் மனிதன்: வீட்டை விட்டு வெளியே வர தயங்கும் பரிதாபம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்சில் இளைஞன் ஒருவருக்கு அரிய வகை தோல் நோயினால் அவர் தீய ஆவி, பேய் மனிதன் என்று அங்கிருப்பவர்கள் கூறி வருவதால், அவர் மிகுந்த மனவருத்திற்கு உள்ளாகியுள்ளார்.

பிலிப்பைன்சின் Aklan மாகாணத்தைச் சேர்ந்தவர் Antonio Reloj( 26). இவர் பிறக்கும் போதே ichthyosis என்ற நோயின் தாக்கத்துடன் பிறந்துள்ளார்.

இதனால் அவரது தோல்கள் தடித்தும், வெடித்தும் மற்றும் எரிந்த நிலையில் இருப்பது போன்று காணப்படும். இவருடைய கண்கள் பா ர்ப்பதற்கும் பயங்கரமாக இருக்கும்.

இந்த நோயின் தாக்கத்தால் Antonio Reloj பிறந்ததால், அவரது தாய் 12-வயதில் இவரை கைவிட்டுவிட்டர்.

அதைத் தொடர்ந்து இவரது பாட்டி அவரை வளர்த்து வருகிறார். அவருக்கு நாட்டின் தலைநகரமான Manila-வில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Antonio Reloj-பொழுது போக்கிற்காக அங்குள்ள மார்க்கெட்டுகள் மற்றும் தேவலாயங்கள் போன்ற இடங்களுக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில் அவர் இது குறித்து கூறுகையில், தான் சிறுவயதில் இருக்கும் போது தன்னுடைய தோற்றத்தைக் கண்டு பலரும் இவன் ஒரு பேய் என்று பயந்தனர். அப்போது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் தற்போது அதுவே வினையாக உள்ளது. தன்னை பேய் மனிதன் என்றும் தீய ஆவி என்றும் இங்கிருப்பவர்கள் கூறுவதால், வீட்டை விட்டு வெளியே வருவதற்கே மிகவும் சங்கட்டமான சூழ்நிலை ஏற்படும்.

தனக்கு எலக்டீரிசியன் ஆக வேண்டும் என்பது ஆசை, இதனால் நான் ஒரு மிகச் சிறந்த எலக்ட்ரிசியனாக வருவேன் என்றும் தான் ஒரு மனிதன், தனக்கும் ஆசைகள் இருக்கும் அனைவரும் புரிந்து கொள்ளுங்கள் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் Antonio Reloj பிறந்தவுடனே அவரது தந்தையும் கைவிட்டுவிட்டார், 12-வயதில் அவரது தயாரும் கைவிட்டுவிட்டார்.

இதனால் Antonio Reloj தனக்கு வந்த இந்த நோயினால் மிகவும் வேதனைப்படுவார். வெளியில் வருவதற்கு கூச்சப்படுவார், இதனால் நான் வெளியில் வரமாட்டேன் தன்னை காணவேண்டும் என்றால் நீ வீட்டிற்கு வா, வந்து பார்த்து செல் என்று கூறுவார் என அவரது உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.

தற்போது அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் உதவினால் அவன் கூடிய விரைவில் நலமாக முடியும். அதனால் முடிந்த அளவிற்கு யாரேனும் உதவ முன் வாருங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments