ஐ.நா.வின் அச்சுறுத்தலை முற்றாக நிராகரித்த வடகொரியா

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகள் அதிகரிக்கப்படும் என்ற ஐ.நா.வின் அச்சுறுத்தலை அந்நாடு முற்றிலுமாக நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியா கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 'புக்குக்சோங்-2' என்ற ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

இந்த ஏவுகணையானது 500 கி.மீ. தூரம் சென்று தாக்கக்கூடிய திறன் கொண்டது. இதற்கு அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா தனது போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையேல் அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் அதிகரிக்கப்படும் என்று ஐ.நா. எச்சரித்தது.

இதுகுறித்து கருத்து கூறிய வடகொரியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர், ''அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவாளர்களின் அறிவிப்புகளை என்னவென்று சொல்வது?

வடகொரியா அதன் தற்காப்புக்காக செய்யும் அணு ஆயுத ஏவுகணை சோதனைகளில் குற்றம் கண்டு பிடிப்பது கேலிக்குரியது. ஐநாவின் அறிவிப்பை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments