இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம்: தயார் நிலையில் பாகிஸ்தான் ராணுவம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானின் நிலைகளை இந்திய ராணுவம் கடுமையான தாக்குதல் நடத்தி நேற்று அழித்தது.

இதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் எல்லைப்பகுதியில் விமானதளங்களை தயார் நிலையில் வைக்கும்படி பாகிஸ்தான் ராணுவத்திற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்திய எல்லையை நோக்கி ஆயுதங்களையும், ராணுவ வீரர்களின் படைகளையும் பாகிஸ்தான் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் விதத்தில் போர் விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் தயார் செய்வது போன்ற வீடியோவையும் அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

மேலும், ஜம்முவின் ஷம்ஷாபாரி பகுதியில் ஒரு பயங்கரவாதியின் சடலமும் அதன் அருகே பயங்கர ஆயுதங்களும் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயாராகி வருவதாக நம்பப்படுகிறது

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments