பல்கலைகழகத்தின் 115-வது ஆண்டு விழா: மாணவர்கள் உட்பட 115-ஜோடிகளுக்கு திருமணம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் பல்கலைகழகம் ஒன்று தனது 115-வது ஆண்டு விழாவை முன்னிட்டி 115-ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து அசத்தியுள்ளது.

சீனாவின் Nanjing பகுதியில் உள்ளது, Nanjing பல்கலைகழகம். இது கடந்த 1902-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சீனாவில் உள்ள பழமைவாய்ந்த பல்கலைகழகம்களில் இதுவும் ஒன்று.

இந்நிலையில் இந்த பல்கலைகழகத்தின் 115-வது ஆண்டு விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை மேலும் சிறப்பூட்டும் வகையில் 115-ஜோடிகளுக்கு திருமணம் செய்து அசரவைத்துள்ளது நிர்வாகம்.

இதில் 57-பழைய மாணவர்கள் ஜோடி, 6-பள்ளி ஊழியர்கள் ஜோடி மற்றும் 52-தற்போது படிக்கும் மாணவர்கள் ஜோடி என 115 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து அசத்துள்ளது.

இதில் மணமகன்கள் கருப்புநிற கோட் அணிந்து கொண்டு, வெள்ளை நிற தேவதையாக இருந்த மணமகள்களுக்கு கையில் மோதிரம் அணிந்து கொண்டு முத்தம் பகிர்ந்துகொண்ட செயல் அங்கிருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

கடந்த 2016-ஆம் ஆண்டின் தகவல்படி இந்த பல்கலைக்கழகத்தில் மொத்தம் 32,999 பேர் உள்ளதாகவும், அதில் 13,583-மாணவர்கள் இளநிலை பட்டதாரிகளாகவும், 10,865 முதுகலை பட்டதாரிகளாகவும், 5,335 மருத்துவ மாணவர்களாகவும், 3,216 முழு நேர அளவில் படிக்கும் சர்வதே நாட்டைச் சேர்ந்த மாணவர்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments