ஜேர்மனி பெண் படுகொலை...பின்லாந்து பெண் கடத்தல்: ஆப்கானில் தலிபான்கள் அட்டூழியம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஆப்கானிஸ்தானில் ஜேர்மனி பெண் மற்றும் ஆப்கான் காவல்படையை சேர்ந்த வீரரை கொன்ற தலிபான் தீவிரவாதிகள், பின்லாந்து பெண்ணை கடத்திச்சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்தியை ஆப்கான் உள்துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது.

கபூலில் உள்ள ஸ்வீடிஷ்ன் அரசு சாரா அமைப்பான ஆபரேஷன் மெர்சிக்கு சொந்தமான விருந்தினர் இல்லத்தில் நுழைந்த தீவிரவாதிகள்.அங்கிருந்த ஆப்கான் காவல்படை வீரரை தலையை துண்டித்து கொன்றுள்ளனர்.

பின்னர், விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த ஜேர்மனி பெண்ணை கொன்ற தீவிரவாதிகள், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணை கடத்திச்சென்றுள்ளனர் என ஆப்கான் உள்துறை அமைச்சகம் தெரவித்துள்ளது.

இரண்டு பெண்களும் ஆபரேஷன் மெர்சி அமைப்பில் பணியாற்றி வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தற்போது வரை சம்பவம் குறித்து ஸ்வீடனின் நிவாரண மற்றும் மேம்பாட்டு அமைப்பு கருத்து தெரிவிக்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2001ம் ஆண்டு முதல் சுமார் 100 பேர் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments