நிர்வாண போஸ்: மொடல் அழகியின் செயலால் வேதனையில் மக்கள்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தில் உள்ள மலை மீது ஜெய்லீன் குக் என்ற மொடல் அழகி நிர்வாணமாக புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தில் தரானாகி மலையை அங்குள்ள மாவேரி இனக்குழு மக்கள் புனிதமாக கருதி வருகின்றனர்.

மேலும், அந்த மலையை தங்களுடைய மூதாதையர்களாக கருவதால், இந்த மலை மீது ஏறுவது பொருத்தமற்ற ஒன்று என்றும், அப்படி இந்த மலை மீது ஏறினால் இது ஒரு அபூர்வசடங்காகவும் கருதப்படுகிறது.

அப்படியிருக்கையில், மொடல் அழகி குக் இந்த மலையில் ஏறியதோடு மட்டுமல்லால் அங்கு நின்று நிர்வாண புகைப்படம் வேறு எடுத்துள்ளனர்.

இது மாவேரி இன மக்களின் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போது, சுற்றுலாப் பயணிகள் இந்த அழகிய எரிமலை மீது ஏற விரும்புகிறார்கள் என்பதை இந்தப் பழங்குடியினர் ஏற்றுக்கொள்கிறார்கள்.

வரும் மக்களை அந்த மலை பற்றி மரியாதையாக இருக்க மட்டுமே நாங்கள் சொல்கிறோம். ஆனால் அவர்கள் இவ்வாறு நடந்துகொள்வது எங்களை அவமதிப்பது போன்று உள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments