தலைநகரில் 6 லட்சம் பேரை வெளியேற்றிய கிம் அரசு: பீதியில் வட கொரிய மக்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வட கொரியா தலைநகர் பியோங்கியாங்கில் இருந்து 6 லட்சம் பொதுமக்களை வெளியேற்ற கிம் அரசு உத்தரவிட்டுள்ள தகவல் உலக நாடுகளிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது.

வட கொரியா ஜனாதிபதி கிம் ஜோங் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது முதல் உலக நாடுகளின் மொத்த பார்வையும் அந்த நாட்டின் மீது தற்போது திரும்பியுள்ளது.

மட்டுமின்றி நகர பகுதிகளில் குடியிருக்கும் 25 விழுக்காடு பொதுமக்களையும் உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளதாக ரஷ்யாவில் இருந்து வெளியாகும் சில தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆனால் பொதுமக்களை ஏன் வெளியேற்றப்படுகிறார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது மட்டுமல்ல, உரிய தகவலும் அங்குள்ள அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவுடன் போர் மூளும் அபாயம் ஏற்பட்டதை அடுத்தே வட கொரியா ஜனாதிபதி கிம் ராணுவ நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஆறாவது முறையாக அணு சோதனைக்கு தயாராவதால் இந்த வெளியேற்ற நடவடிக்கை எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

வட கொரியாவை சீனா கண்டிக்க தவறினால் அமெரிக்கா கடுமையான முடிவை எடுக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனைத்தொடர்ந்தே வட கொரியா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments