சிரியா மீது ஏவுகணை வீசிய அமெரிக்கா: இவான்கா டிரம்ப் தான் காரணமா?

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

சிரியா மீது ஏவுகணை வீச அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மகளான இவான்கா டிரம்பும் காரணமாக இருக்கலாம் என தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரியாவில் சில தினங்களுக்கு முன்னர் நிகழ்த்தப்பட்ட ரசாயன தாக்குதலில் சிக்கி சுமார் 100 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 7-ம் திகதி சிரியா மீது அமெரிக்கா 59 ஏவுகணைகளை வீசியது.

இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டானர். அமெரிக்காவின் இந்நடவடிக்கை சிரியா மற்றும் ரஷ்யா நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஜனாதிபதி டிரம்பின் மகனான எரிக் டிரம்ப் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘இவான்கா டிரம்ப் தற்போது ஜனாதிபதி ஆலோசகராகவும் பதவி வகித்து வருகிறார்.

இதுமட்டுமில்லாமல், டொனால்ட் டிரம்பின் அன்பிற்குரிய மகளாகவும் இவான்கா டிரம்ப் திகழ்ந்து வருகிறார்.

எனவே, சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த இவான்கா டிரம்ப் தனது தந்தைக்கு ஆலோசனை வழங்கியிருக்க கூடும்.

மகளின் விருப்பங்களையும் ஆலோசனைகளையும் தந்தையான டிரம்ப் எளிதில் நிராகரிக்க மாட்டார்’ என எரிக் டிரம்ப் வெளியிட்டுள்ள தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments