வாகனத் தரிப்பிடக் கட்டடம் சரிந்து விழுந்து ஏழு பேர் பலி;

Report Print Thayalan Thayalan in ஏனைய நாடுகள்
வாகனத் தரிப்பிடக் கட்டடம் சரிந்து விழுந்து ஏழு பேர் பலி;

மெக்ஸிக்கோவில், வாகனத் தரிப்பிடத்துக்காக நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடம் ஒன்று சரிந்து விழுந்ததில் ஏழு பேர் கொல்லப்பட்டதுடன் இருபதுக்கும் அதிகமானோர் படுகாயங்களுக்கு உள்ளாயினர்.

மெக்ஸிக்கோவின் ஃபூஸ்டோ லுகோ நகரில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு நிகழ்ந்த இந்த விபத்தின் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழுவினரும் தீயணைப்புப் படையினரும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமுற்றவர்கள் உடனடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொங்கிறீட் கட்டத் தளத்தின் மீது ஒரு பாரிய தூணை நிறுத்த தொழிலாளர்கள் முயற்சித்தபோதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments