மாதவிடாய் காலத்தில் எவ்வளவு சிரமம்: பெண் பொலிஸ் அதிகாரிக்கு நிகழ்ந்த துயரம்

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

ஸ்பெயின் நாட்டில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் பணியில் இருந்தபோது மாதவிடாய் ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது அவரது பணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயின் தலைநகரான பார்சிலோனாவில் இளம்பெண் ஒருவர் பொலிஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த மார்ச் 8-ம் திகதி(சர்வதேச மகளிர் தினம்) அன்று முக்கிய இடத்தில் பாதுகாப்பு பணிக்கு அவர் அனுப்பப்பட்டுள்ளார்.

ஆனால், பணிக்கு அனுப்பப்பட்ட நேரத்தில் அவர் மாதவிடாய் அடைந்துள்ளார். பணியில் இருந்தபோது அவசரமாக கழிவறைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

வேறு வழியின்றி கழிவறைக்கு சென்ற அவர் சுத்தம் செய்துக்கொண்டு 10 நிமிடங்களுக்கு பிறகு பணிக்கு திரும்பியுள்ளார்.

ஆனால், பெண் பொலிஸ் அதிகாரி பணியில் இல்லாததை அறிந்த உயர் பொலிஸ் அதிகாரி பெண் பொலிஸை தொடர்புக் கொண்டு கடுமையாக கண்டித்துள்ளார்.

'பணிக்கு முன்னதாக அல்லது பணி முடிவடைந்த பிறகு தான் கழிவறைக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், பணி நேரத்தில் கழிவறைக்கு சென்றது மன்னிக்க முடியாத குற்றம்.

இந்த குற்றத்திற்கு நீங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும்' என உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

உயர் பொலிஸ் அதிகாரியின் கண்டனத்தால் தற்போது பெண் பொலிசாரின் பணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பெண் பொலிசார் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் விரைவில் பணியிடை நீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments