ஐனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு உதவிய ரஷ்யர் அதிரடி கைது

Report Print Basu in ஏனைய நாடுகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ஹேக்கிங் செய்யப்பட்டதாக எழுந்த புகார்கள் தொடர்பாக, ரஷ்யர் ஒருவர் ஸ்பெயினில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷ்யா உதவி இருந்ததாக அந்நாட்டின் உளவு அமைப்பு சிஐஏ குற்றம் சாட்டியது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ஹேக்கிங் செய்யப்பட்டதாக எழுந்த புகார்கள் தொடர்பாக, ரஷ்ய ஹேக்கர் ஸ்பெயினில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் கம்ப்யூட்டர் புரோகிராமர் பையோடர் லெவஷோவ் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அரசாங்கம் மூலம் வெளியிடப்பட்ட சர்வதேச பிடி வாரண்ட் மூலம் பையேளாடர் லெவஷோவ் கைது செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

எனினும், தற்போது வரை பையோடர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments