வேற்றுக்கிரகவாசிகளால் கடத்தப்பட்ட மனிதன்! 14 மர்ம புத்தகங்கள் கூறுவது என்ன?

Report Print Mawali Analan in ஏனைய நாடுகள்

அன்றாடம் விசித்திரமான பல சம்பவங்கள் இடம்பெறுவது வழமையாகி விட்டது. விடை காண முடியாத பல விடயங்கள் அமானுஷ்யம் என்ற பதத்திற்குள் அடக்கப்பட்டு விடுகின்றன.

இன்றைய காலக்கட்டத்தில் பூமியை தவிர வேற்றுக்கிரகங்களில் வாழக் கூடிய புத்திஜீவிகள் இருக்கின்றனரா என்ற ஓர் தேடல் பிரதான விடயமாகி விட்டது.

கோடிக்கணக்கில் செலவு செய்து இது தொடர்பில் ஆராய்ச்சிகள் செய்து கொண்டு வரும் வேளையில், அண்மையில் ஆச்சரிய சம்பவம் ஒன்று பிரேசில் நாட்டில் பதிவாகி உள்ளது.

பிரேசிலைச் சேர்ந்த புருனோ போர்கஸ் எனப்படும் ஒருவர் வேற்றுக்கிரகவாசி ஒருவருடன் இருப்பதைப் போன்று ஓவியம் ஒன்றை வரைந்து விட்டு கடந்த மார்ச் 27 அன்று காணாமல் போயுள்ளார்.

இதில் விசித்திரமான விடயம் எது வெனில், அவர் காணாமல் போவதற்கு முன்னர் 14 புத்தகங்களை எழுதிவைத்துள்ளார். சுமார் ஒரு மாத காலம் தனி அறையில் இருந்த அவர் இரகசிய குறியீட்டு மொழி மூலம் இந்த 14 புத்தகங்களை எழுதியுள்ளார்.

அது மட்டுமன்றி அவரது அறை முழுவதும் ஓரிடம் கூட விடாமல் சுவர்களிலும் தரையிலும் இரகசிய குறியீட்டில் பல விடயங்களை எழுதி வைத்துள்ளார்.

இவை அனைத்தும் வரைபடங்களையும் ஏதோ ஓர் மர்மமான மொழியினையும் கொண்டுள்ளது. அவர் வரைந்துள்ள வரைபடங்கள் தொடர்பில் தற்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு கொண்டு வருகின்றது.

மேலும் இவர் இருந்த பூட்டப்பட்ட அறைக்குள், கோள்கள் சூரியனை மையமாகக் கொண்டே இயங்குகின்றன என்பதையும், அண்டம் முடிவில்லாமல் தொடர்வது எனவும் கூறிய இத்தாலிய மெய்யியலாளர் கியோர்டானோ புரூணோ வின் சிலை ஒன்றும் காணப்பட்டுள்ளது.

இவர் 1500களில் வாழ்ந்த ஒருவர் இந்தச் சிலை எப்படி வந்தது என்பதற்கும் விடை இல்லை. காணாமல் போனவரின் குடும்பத்தார் இது தொடர்பில் கூறுகையில்.,

ஒரு மாதத்திற்கு முன்னர் அச்சிலை அங்கு இருக்கவில்லை, வெளியில் இருந்து கொண்டு வந்ததையும் தாம் அவதானிக்க வில்லை என்கின்றனர். இது மேலும் மர்மமாக காணப்படுகின்றது.

இதேவேளை இவர் வேற்றுக் கிரக வாசிகளுடன் தொடர்பு கொண்ட நபராக இருக்கலாம் எனவும் இவர் மூலமாக அவர்கள் உலகிற்கு ஏதோ செய்தியினை கூறியுள்ளார்கள் எனவும் ஒரு சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவர் வரைந்துள்ள ஓவியம் ஒன்று பிரமிப்பின் உச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ஓவியத்தில் வரையப்பட்டுள்ள வேற்றுக் கிரகவாசி நெற்றியில் கண் ஒன்றினை உடையவராக வரையப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இவர் வேற்றுக் கிரகவாசிகளால் கடத்தப்பட்டாரா? அவரின் குறியீடு எதனை வெளிப்படுத்துகின்றது என்பது தொடர்பில் ஆய்வுகளும் விசாரணைகளும் தொடர்ந்து கொண்டு வருகின்றது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments