சொர்க்கத்துக்கு என்னுடன் வருவாயா அம்மா? இறப்பதற்கு முன்னர் சிறுவனின் இறுதி நிமிடங்கள்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கடுமையான புற்றுநோய் காரணமாக உயிரழந்த தன் மகனுடன் தான் பேசிய உருக்கமான கடைசி நிமிடங்களை அவர் தாய் வெளியிட்டுள்ளார்.

Ruth Scully என்னும் பெண்ணுக்கு Nolan (4) என்னும் மகன் உள்ளான். இவருக்கு ஏற்பட்ட கடுமையான புற்றுநோய் காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்து விட்டான்.

இந்நிலையில் Nolan இறந்த நாளன்று தன்னிடம் இறுதியாக பேசிய வார்த்தைகளை அவர் தாய் Ruth சமூகவலைதளங்களில் எழுதியுள்ளார்.

அந்த உருக்கமான உரையாடல்

தாய்: உனக்கு உடலில் அதிக வலி உள்ளதா?

Nolan: ஆமாம்

தாய்: புற்று நோய் வந்தால் அப்படி தான். இனி நோயுடன் நீ போராட வேண்டாம்

Nolan: அப்படியா? நான் உனக்காக போராடுகிறேன் அம்மா

தாய்: சரி, அம்மாவின் கடமை என்ன?

Nolan: என்னை பத்திரமாக பார்த்து கொள்வது

தாய்: இங்கு உன்னை என்னால் இனி பார்த்து கொள்ள முடியாது. உன்னை பாதுகாப்பாக சொர்க்கத்தில் பார்த்து கொள்வேன்.

Nolan: சரி அம்மா, நீங்கள் சொர்க்கத்துக்கு வரும் வரை, நான் அங்கு விளையாடுகிறேன் அம்மா

நீங்கள் நீச்சயம் சொர்க்கத்துக்கு வருவீர்கள் தானே

Nolan: கண்டிப்பாக வருவேன். அம்மாவை விட்டு நீ பிரிய முடியாது

இப்படி உருக்கமாக அந்த உரையாடல் உள்ளது, இது நடந்த பிறகு சிறுவன் Nolan உயிரிழந்துள்ளான்.

இந்த உரையாடல் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments