தேவாலயத்தில் தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதல்: ஈடுபட்ட நபரின் வீடியோ வெளியானது

Report Print Santhan in ஏனைய நாடுகள்

எகிப்தில் உள்ள தேவாலயத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் பலியாகினர், 40 பேர் படுகாயமடைந்தனர்.

எகிப்தின் அலெக்சாண்டரிய பகுதியில் உள்ள Coptic Christian Cathedral தேவாலயத்தில் மர்ம நபர் ஒருவர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டார். இதில் 11 பேர் பலியாகினர் மற்றும் 40 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அங்கு தற்கொலை தாக்குதல் நடத்திய மர்ம நபரின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கருப்பு நிற ஜாக்கட் அணிந்து வரும் நபர், தேவாலயத்தின் வாசலில் உள்ளே நுழைய பார்க்கிறார்.

ஆனால் அங்கு இருக்கு காவலர், மெட்டல் டிடக்டரின் உள்ளே சென்று வரும் படி கூறுகிறார். சரி என்று சென்ற அந்த நபர் மெட்டல் டிடக்டரின் அருகே சென்றவுடன் இரண்டு தடவை பின் வாங்குகிறார். அதன் பின் பயங்கர வெடி சத்ததுடன் குண்டு வெடிக்கிறது.

இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இத்தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் தான் St. George’s Coptic தேவாலயத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 21 பேர் பலி மற்றும் 38 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments