5 அறுவைசிகிச்சைகள்... 28 மணி நேரம் தொடர்ந்து பணி: நடைபாதையில் படுத்துறங்கிய மருத்துவர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் மருத்துவமனை ஒன்றில் தொடர்ந்து 28 மணி நேரம் பணி செய்த களைப்பில் மருத்துவமனை நடைபாதையிலேயே மருத்துவர் ஒருவர் குட்டித்தூக்கம் இட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

சீனாவின் டிங்க்யுவான் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையில் குறித்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தொடர்ந்து 28 மணி நேரம் பணி செய்து களைத்த அந்த மருத்துவர் தமது குடியிருப்புக்கு செல்லாமல், மருத்துவர்கள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, மருத்துவமனை நடைபாதையிலேயே படுத்து களைப்பை நீக்கியுள்ளார்.

இச்சம்பவத்தை புகைப்படமாக எடுத்த சக ஊழியர்கள் சமூகவலைதளத்தில் பதிவேற்றி மருத்துவர் லூ ஹெங்கை வானுயர புகழ்ந்துள்ளனர்.

குறித்த தினத்தன்று இரவுப்பணிக்கு வந்த மருத்துவர் லூ, அன்றைய தினம் இரண்டு அறுவைசிக்கிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

தொடர்ந்து காலையில் 3 அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். இதனால் அவர் அதிக களைப்பாக காணப்பட்டார் என சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சிலர் மருத்துவரை இகழ்ந்தும் பேசியுள்ளனர். போதிய இடைவெளி விட்டு அறுவைசிகிச்சை மேற்கொண்டிருப்பார் என்றே அவர்களின் கருத்தாக உள்ளது.

ஆனால் இணையத்தில் பலரும் மருத்துவரின் கடின உழைப்பையும் தொழில் பக்தியையும் புகழ்ந்து பேசியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments