தற்கொலைப்படை தீவிரவாதியை கொன்ற நாய்: உடல்சிதறி இறந்த பரிதாபம்

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

நைஜீரியா நாட்டில் தற்கொலைப்படையை சேர்ந்த பெண் தீவிரவாதி ஒருவரின் தாக்குதலை தன்னுயிர் கொடுத்து நாய் ஒன்று தடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் உள்ள Belbelo என்ற சிறிய கிராமத்தில் சில தினங்களுக்கு முன்னர் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இத்திருமணத்தில் பங்கேற்க நூற்றுக்கணக்கான கிராம மக்கள் திரண்டுள்ளனர்.

அப்போது, திருமணத்திற்கு அறிமுகம் இல்லாத பெண் ஒருவரின் வந்துள்ளார். ஆனால், பெண்ணை பார்த்த அங்கிருந்த நாய் ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்துள்ளது.

நாயின் தாக்குதலை எதிர்க்க முடியாமல் பெண் அங்கும் இங்கும் ஓடியுள்ளார். சில வினாடி நேரத்தில் பெண்ணின் உடலில் கட்டியிருந்த குண்டுகள் வெடித்துச் சிதறியுள்ளது.

இச்சம்பவத்தில் பெண்ணும் நாயும் உடல் சிதைந்து பலியாயினர்.

இத்தாக்குதல் சம்பவம் குறித்து உள்ளூர் பொலிசார் வெளியிட்ட தகவலில், ‘திருமண நிகழ்வில் தாக்குதல் நடத்த மனித வெடிகுண்டாக பெண் ஒருவர் வந்துள்ளார்.

ஆனால், இதனை தனது மோப்ப சக்தியால் அறிந்தக்கொண்ட நாய் அவரை தடுத்து நிறுத்தி தாக்குதலை முறியடித்துள்ளது.

தாக்குதலை தன்னுயிர் கொடுத்து நாய் தடுத்து நிறுத்தியதால் நூற்றுக்கணக்கான மக்கள் தற்போது உயிர் பிழைத்துள்ளனர்.

இத்தாக்குதலுக்கு போகோ ஹாரம் தீவிரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments