பாலியல் அடிமைகளாக்கப்படும் நேபாள பெண்கள்: ஐக்கிய அமீரக நாடுகளில் கொடிகட்டும் விற்பனை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஐக்கிய அமீரக நாடுகளுக்கு சட்டவிரோதமாக நேபாளத்திலிருந்து ஏழைப் பெண்கள் கடத்தப்படுவது அம்பலமாகியுள்ளது.

ஐக்கிய அமீரக நாடுகளில் பாலியல் அடிமைகளாக ஏழைப் பெண்களை விலை கொடுத்து வாங்கும் கொடூர நிலை கொடிகட்டி பறப்பதாக கூறப்படுகிறது.

அதில் நேபாள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குடிவரவுத்துறை அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட நேபாள நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமை வகிக்கும் பிரபு ஷா தெரிவித்துள்ளார்.

நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 29 மில்லியன் பேர் வளைகுடா நாடுகள், மலேசியா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களின் மூலம் நேபாளத்துக்கு வரும் பணம் வழியே அந்நாட்டு அரசுக்கு பெரும் வருவாய் கிடைக்கிறது. நேபாளத்தின் மொத்த உள்நாட்டு வருவாயில் 25% இதன் வழியாகக் கிடைக்கிறது.

நேபாளம் மட்டுமன்றி இந்தியா, இலங்கை, வங்கதேசத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்குப் பணிப்பெண்களாக அழைத்துச் செல்லப்படுபவர்கள் சம்பள பிரச்னை, உடல் ரீதியான சித்ரவதைகளை எதிர்கொள்வதாக குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே உள்ள நிலையில் நேபாள நாடாளுன்றக் குழுவும் இவ்வாறான குற்றச்சாட்டினை வைத்துள்ளது.

சட்ட வல்லுநர் பிரபு ஷா தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழு சவுதி அரபியா, குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஐந்நூறுக்கும் மேற்பட்ட நேபாளத் தொழிலாளர்களை சந்தித்துள்ளது.

அத்துடன் இதில் பெரும்பாலானோர் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளின் சர்வதேச விமான நிலையங்கள் வழியாகவும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார் பிரபு ஷா.

சுற்றுலா விசா மூலம் சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்படும் இப்பெண்கள் மூன்று லட்சம் ரூபாய்க்கு பணிப்பெண்கள் என்ற போர்வையில் பாலியல் அடிமைகளாக விற்கப்படுவது தற்போது அம்பலமாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments