ரஷ்யாவில் பதற்றம்..பள்ளிக்கு அருகில் வெடித்த வெடிகுண்டு: ஒருவர் காயம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் பள்ளிக்கு அருகில் கிடந்த மர்மபொருள் ஒன்றை நபர் ஒருவர் எடுத்து பார்த்த போது, எதிர்பாராதவிதமாக வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் Rostov-on-Don என்ற பகுதியில் நபர் ஒருவர் சென்று கொண்டிருந்த போது, மர்மப் பொருள் ஒன்றை கண்டுள்ளார். அந்த பொருள் பார்ப்பதற்கு வெடிகுண்டு போன்று இருந்துள்ளது.

அதில் விளக்கு ஒன்று ஒளிர்ந்துள்ளது. இதனால் அவர் உடனடியாக அதை எடுத்து என்னவென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது திடீரென்று அந்த பொருள் வெடித்துள்ளது.

இதனால் அந்த நபர் ரத்தக் காயங்களுடன் அங்குள்ள இடத்தில் சுருண்டு விழுந்துள்ளார். இதைக் கண்டு அருகில் இருந்தவர்கள் உனடியாக ஆம்புலன்ஸை அழைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகையில், காயங்களுக்குள்ளான நபரின் பெயர் Dmitry Kolesnik (46) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென்று நடந்த இச்சம்பவத்தால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த பள்ளிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியை பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

மேலும் மூன்று தினங்களுக்கு முன்னர் தான் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்ததில் 11 பேர் உடல் சிதறி பலியாகினர், 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments