சர்வதேசளவில் இஸ்லாம் முதன்மை மதமாக மாறும்: ஆய்வில் தகவல்

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

சர்வதேச அளவில் எதிர்வரும் 2075-ம் ஆண்டிற்குள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவர்களின் எண்ணிக்கை பிற மதத்தவர்களை விட கூடுதலாக இருக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

2015-ம் ஆண்டின் புள்ளிவிபரத்தின்படி உலகில் தற்போது 7.3 பில்லியன் மக்கள் உள்ளனர்.

இவர்களில் கிறித்துவ மதத்தினர் 31 சதவிகிதம், இஸ்லாமியர்கள் 24 சதவிகிதம், எந்த மதத்தையும் சாராதாவர்கள் 16 சதவிகிதம், இந்து மதத்தினர் 15 சதவிகிதம் மற்றும் புத்த மதத்தினர் 7 சதவிகிதம் உள்ளனர்.

2010 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகளில் 33 சதவிகிதத்தினர் கிறித்துவர்கள், 31 சதவிகிதத்தினர் இஸ்லாமியர்கள்.

ஆனால், தற்போது இஸ்லாமிய பெற்றோர்கள் மத்தியில் பிறப்பு சதவிகிதம் அதிகரித்து வருவதால் 2075-ம் ஆண்டிற்குள் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை உலகளவில் முதல் இடத்தில் இருக்கும் என தெரியவந்துள்ளது.

உதாரணத்திற்கு, 2030 மற்றும் 2035 ஆண்டுகளில் பிறக்கும் குழந்தைகளில் 225 மில்லியன் பேர் இஸ்லாமியர்களாகவும், 224 மில்லியன் குழந்தைகள் கிறித்துவர்களாகவும் இருப்பார்கள்.

அதே போல், 2055 மற்றும் 2060 ஆண்டுகளில் பிறக்கும் குழந்தைகளில் 232 மில்லியன் பேர் இஸ்லாமியர்களாகவும், 226 மில்லியன் பேர் கிறித்துவர்களாகவும் இருப்பார்கள் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments