போர்ச்சுகலில் பயங்கர வெடிவிபத்து: 7 பேர் பலி..100 தீயணைப்பு வீரர்கள் விரைவு

Report Print Basu in ஏனைய நாடுகள்

போர்ச்சுகலில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

போர்டோ அருகே Avoes கிராமத்தில் உள்ள சிறிய பட்டாசு தொழிற்சாலையிலே இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த 100 தீயணைப்பு வீரர்கள், காவல்துறை மற்றும் மருத்துவ உதவியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காணாமல் போன மூன்று பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும், அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவத்தின் போது தொழிற்சாலையில் எத்தனை பேர் இருந்தார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் விபத்திற்கான காரணம், சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments