அடேங்கப்பா...!!! உச்சத்தை தொட்ட பிங்ஸ் ஸ்டார் வைரத்தின் ஏலம்

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

ஹோங்காங் நாட்டில் அரிதான பிங்க் நிற வைரக்கல் ஒன்று 71 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹோங்காங் நாட்டில் Sotheby's என்ற பிரபல ஏல நிறுவனம் விலையுயர்ந்த நகைகளை நேற்று ஏலமிட்டுள்ளது.

இந்த ஏலத்தில் ‘பிங்க் ஸ்டார் வைரம்’ என்று அழைக்கப்படும் மிக அரிதான வைரக்கல் ஒன்று 71 மில்லியன் டொலருக்கு(1078,77,40,000 இலங்கை ரூபாய்) விற்பனையாகியுள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள சுரங்கம் ஒன்றில் கடந்த 1999-ம் ஆண்டு இந்த வைரக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.

59.6 காரட் கொண்ட இந்த வைரக்கல்லை கலை நயத்துடன் செதுக்கும் பணி இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று பின்னர் ஏலம் விடப்பட்டது.

முன்னதாக 2013-ம் ஆண்டு இந்த வைரக்கல் 50 மில்லியன் டொலருக்கு ஏலம் எடுக்கப்பட்டது.

இதே வைரக்கல் நேற்று ஹோங்காங் நாட்டில் ஏலமிடப்பட்டபோது 71 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதே நாட்டை சேர்ந்த Chow Tai Fook என்ற நகைக்கடையின் உரிமையாளர் இந்த வைரக்கல்லை விலைக்கு வாங்கியுள்ளார்.

மனிதகுல வரலாற்றில் பிங்க் நிறத்தில் உள்ள ஒரு வைரக்கல் இவ்வளவு தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments