தன் நாக்கை வைத்து பேனின் இறக்கைகளை நிறுத்திய பெண்: அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சர்க்கஸ் பெண் ஒருவர் தன் நாக்கை வைத்து இயங்கிக்கொண்டிருக்கும் பேனின் இறக்கைகளை நிறுத்தும் சம்பவம் பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Zoe Ellis என்ற சர்க்கஸ் பெண் உலகசாதனை படைக்க வேண்டும் என்பதற்காக விசித்திர முடிவை எடுத்துள்ளார்.

இத்தாலியில் Lo Show dei Record என்ற உலகசாதனைக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் Zoe Ellis வும் கலந்து கொண்டார்.

அங்கு அவரிடம் 35 வாட்ஸ் திறன் கொண்ட இரண்டு பேன்கள் கொடுக்கப்பட்டது. பேன் அதிவேகமாக இயக்கப்பட்டது.

பேன் இயங்கியவுடன், அவர் தன் நாக்கை வைத்து பேனின் இறக்கைகளை நிறுத்துகிறார் Zoe Ellis.

இது போன்று அவர் தொடர்ந்து 16 முறை இரண்டு பேன்களின் இறக்கைகளை நிறுத்துகிறார். இதானால் இரண்டையும் சேர்த்து 32 முறை நிறுத்தியுள்ளார்.

இதற்கு முன்னர் 20 முறை மட்டுமே நிறுத்தப்பட்ட இந்த சாதனையை, Zoe Ellis முறியடித்துள்ளார்.

அவர் இறக்கையை நாக்கை வைத்து நிறுத்தும் போது பார்வையாளர் சிலர் ஒ மை காட் என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினர். இந்த சம்வத்தால் அப்பெண்ணுக்கு நாக்கில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments