70 வயது நபருக்கு 6 மனைவிகள், 54 குழந்தைகள்

Report Print Basu in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் அண்மையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 70 வயது நபர் ஒருவருக்கு 6 மனைவிகள், 54 பிறந்துள்ளது தெரியவந்துள்ளது.

நுஷ்கி மாவட்டத்தில் வசிக்கும் 70 வயதான ஹாஜி அப்துல் மஜீத் என்ற நபருக்கு 54 குழந்தைகள் பிறந்துள்ளது.

லொறி ஓட்டுநரான அப்துல் மஜீத் ஆறு முறை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதில் இரண்டு மனைவிகள் இறந்துவிட்டனர், தற்போது நான்கு மனைவிகளுடன் வசித்துவருகிறார்.

54 குழந்தைகளில் 12 குழந்தைகள் இறந்துவிட்ட நிலையில், தற்போது 22 மகன்கள், 20 மகள்கள் என 42 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறார் அப்துல் மஜீத்.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்னர், 36 குழந்தைகளுக்கு தந்தையான ஜான் மொஹம்மத் கில்ஜி தான் அதிக குழந்தைகள் பெற்றவராக திகழந்தார். இப்போது அதிக குழந்தை பெற்றவர் பட்டியலில் அப்துல் மஜீத், முதலிடத்தில் இருக்கிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments