விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகளை விதித்த சிங்கப்பூர்! அதிர்ச்சியில் இந்தியா

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அமெரிக்காவை தொடர்ந்து இந்திய மென்பொருள் ஊழியர்களுக்கு விசா வழங்க சிங்கப்பூர் அரசும் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியா உட்பட வேறு நாடுகளிலிருந்து அமெரிக்காவில் பணிபுரிபவர்களுக்கு விசா விடயத்தில் கடுமையான மாற்றம் கொண்டு வந்தார்.

இந்நிலையில் சிங்கப்பூரும் அதே போல தங்கள் நாட்டு மக்களுக்கே வேலையில் முன்னுரிமை என்ற விடயத்தை மேற்கொள்ளவுள்ளது.

அதன்படி, இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து வேலை செய்யும் மென்பொருள் ஊழியர்களின் விசாவை தடை செய்துள்ளது.

இதனால் சிங்கபூரில் எச்.சீ.எல், இன்போஸில், விப்ரோ, காக்னிசன்ட் போன்ற மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்களை அந்நிறுவனங்கள் திரும்ப பெறும் நிலையில் உள்ளது.

இது குறித்து நாஸ்காம் தலைவர் சந்திரசேகர், சிங்கப்பூர் பிரஜைகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமையளிக்க சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

இந்தியர்களை வடிக்கட்டும் நோக்கில் ENT என்னும் தேர்வை நடத்த சிங்கப்பூர் அரசு அதிகாரிகள் அரசிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தத்தை மீறுவதாக இது உள்ளது என இந்திய நிறுவன அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments