மனிதனை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு: இதற்கு நாம் தான் காரணம்! அதிர்ச்சி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் மலைப்பாம்பு ஒன்று மனிதரை உயிருடன் விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்தோனேசியாவை சேர்ந்தவர் அக்பர் சலுமியா (25), இவர் மனைவி முனு, இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சம்பவத்தன்று அக்பர் அங்குள்ள சுலாவெசி தீவுப் பகுதியில் மாலை நேரத்தில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது தனக்கு பின்னால் யாரோ வருவது போல அக்பர் உணர்ந்துள்ளார். திரும்பி பார்க்க அவர் நினைப்பதற்குள் அவர் பின்னால் இருந்த 23 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு அவர் முதுகில் கொத்தியது.

பின்னர் அக்பர் உயிரோடு விழுங்கியது, சில மணிநேரங்களுக்கு பின்னர் அவரை தேடித் திரிந்து உறவினர்கள் அக்பரை இறந்த நிலையில் மீட்டனர்.

இதுகுறித்து இந்தோனேசியாவின் கல்லூரி பேராசிரியர் ரஹ்மான் கூறுகையில், பாம்பின் மனிதனை விழுங்கியதற்கு காடுகள் அழிப்பே காரணம்.

மரங்களின் தேவைக்காக நாம் காடுகளை அழிப்பதால் வனவிலங்களுக்கான உணவுகளும் அழிக்கப்படுகின்றன, இதனால் விலங்குகளின் உணவுச் சங்கிலியில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

இவையெல்லாம் மனிதன்- விலங்குகளின் தாக்குதலுக்கு காரணம், காடுகள் அழிவதால் மரங்கள் அழிகின்றன, மரங்கள் அழிவதால் விலங்குகள் அழிகின்றன.

உணவுத் தேவைக்காக மக்கள் இருப்பிடம் நோக்கி படையெடுக்கும் விலங்குகளால் தான் மனிதர்களின் உயிருக்கு ஆபத்தாக முடிகிறது.

முடிவில் மனித இனமே அழிந்து போகும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments