எச்ஐவியால் பாதிக்கப்பட்ட ஆகுதி சிறுவன்: இரண்டு சிறுமிகளை சீரழித்த கொடூரம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஐரோப்பா நாடான ஸ்வீடனில் எச்ஐபி நோயால் பாதிக்கப்பட்ட ஆகுதி சிறுவன் இரண்டு பள்ளி சிறுமிகளை சீரழித்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த அதிர வைத்துள்ளது.

எத்தியோப்பியாவை சேர்ந்த 16 வயது சிறுவனே இச்செயலில் ஈடுபட்டுள்ளான். கடந்த ஆண்டு 14 மற்றும் 16 வயதுடைய சிறுமிகளை இச்சிறுவன் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறுவன் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தை மறுத்த சிறுவன், ஒரு சிறுமியுடன் மட்டும் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

எச்ஐவி நோய் இருப்பது அறிந்த சிறுவன், தகுந்த மருந்துகள் உட்கொள்ளாமல் சிறுமிகளுடன் தவறு செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர் கூறியதாவது, சிறுவனுக்கு 15 வயது இருக்கும் போது சம்பவம் நடந்ததால் அவருக்கு தண்டனை கிடைக்காது என தெரிவித்துள்ளார்.

எனினும், சிறுமிகளை சோதனை செய்து பார்த்ததில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments