சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்த கட்டிடம்! உள்ளிருந்த நபர் : பதறவைக்கும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்த போது அருகிலிருந்த நபர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

ரஷ்யாவின் Voronezh நகரில் ஒரு பாழடைந்த கட்டிடம் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் அந்த கட்டிடம் இருந்து வந்தது.

இந்நிலையில், ராட்சஷ இயந்திரம் மூலம் அதை இடிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ராட்சஷ இயந்திரத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு நபர் அதை இயக்கினார்.

அப்போது கட்டிடத்தின் முன் பக்கமாக அந்த நபர் ராட்சஷ இயந்திரத்தின் உள்ளே உட்கார்ந்திருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிடம் சீட்டு கட்டு சரிவது போல சரிய தொடங்கியது.

உடனே அந்த நபர் வேகமாக இயந்திரத்தை பின்நோக்கி இயக்கினார். இதனால் சிறு காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.

கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானதால் அருகிலிருந்த கார்கள் சேதமடைந்தன.

இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் வேளையில், கட்டிடம் இடியும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments