போப் ஆண்டவரின் தொப்பியை திருடிய சிறுமி: நெகிழ வைக்கும் வீடியோ காட்சி

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்

கத்தோலிக்க மதத்தலைவரான போப் ஆண்டவரின் தொப்பியை சிறுமி ஒருவர் திருடியுள்ள காட்சிகள் இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இத்தாலி தலைநகரமான ரோமில் போப் பிரான்சிஸ் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது, அமெரிக்காவை சேர்ந்த 3 வயதான ஷேர்லி என்ற சிறுமியும் அக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

கூட்டத்தினர் மத்தியில் போப் பிரான்சிஸ் நடந்துச் சென்றபோது சிறுமியை தன்னிடம் அழைத்து வருமாரு கூறியுள்ளார்.

பின்னர், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சிறுமியை தூக்கிக்கொண்டு போப் பிரான்சிஸிடம் சென்றுள்ளார்.

எதுவும் அறியாத சிறுமி போப் பிரான்சிஸின் கன்னத்தில் முத்தமிட்ட மறுநிமிடம் அவரது தலையில் இருந்த தொப்பியை பறித்துள்ளார்.

இக்காட்சியை கண்டு சுற்றி நின்றவர்கள் ஒரு வினாடி அதிர்ந்து போனார்கள்.

ஆனால், சிறுமியின் செயலைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்த போப் பிரான்சிஸ் வாய்விட்டு சிரித்துக்கொண்டு சிறுமியின் கையில் இருந்த தனது தொப்பியை மீண்டும் பெற்றுக்கொண்டார்.

பின்னர், கூட்டத்தினர் மத்தியில் இயல்பு நிலை திரும்பியதும் போப் பிரான்சிஸ் சிறுமிக்கு விடைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

போப் பிரான்சிஸின் தொப்பியை சிறுமி பறித்துள்ள சம்பவம் வீடியோவாக வெளியாக தற்போது இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments