ஆண் நபரின் வயிற்றுக்குள் கர்ப்பப்பை: மருத்துவ உலகில் அதிசயம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

இந்தியாவின் தமிழ்நாட்டில் ஆண் ஒருவரின் வயிற்றில் கர்ப்பப்பை இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான முருகேசன்(28) என்பவர் கடந்த 6 மாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதற்காக, பல்வேறு மருந்துகளை சாப்பிட்டும் அவை எதுவும் பலனளிக்கவில்லை. இந்நிலையில், இவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, முருகேசனுக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில், அவரது வயிற்றில் 1 அடி 3 இன்ச் அளவில் கர்ப்பப்பை உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதனைக்கேட்டு முருகேசன் அதிர்ச்சியடைந்தார்.

இதனைத்தொடர்ந்து, முருகேசனின் வயிற்றில் இருந்து கர்ப்பப்பை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது.

அதாவது பெண்களுக்கு இருப்பது போன்று கர்ப்பப்பை கோடி ஆண்களில் ஒருவருக்கு இப்படி உருவாக வாய்ப்பிருக்கிறது.

அதுபோன்று தான் முருகேசன் வயிற்றில் கர்ப்பபை உருவாகியுள்ளது. ஒருவேளை முருகேசனின் கர்ப்பப்பை அகற்றப்படாமல் இருந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் போன்ற பிரச்சனைகள் அவருக்கும் ஏற்பட்டிருக்கும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments