40 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை? பதறவைக்கும் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் ஒருவர் 40 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தெற்கு சீனாவின் குவான்சோ பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இங்கு 40 வது மாடி கட்டிடத்தில் இருந்து மர்ம நபர் ஒருவர் தற்கொலை செய்து கொள்வது போன்று, அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.

இதை ஒருவர் தன்னுடைய மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். அப்போது குதித்த நபர் பாதிதூரம் சென்றவுடன், தான் வைத்திருந்த மஞ்சள் கலர் பாரசூட்டை அவிழ்த்திவிட்டு அனைவரையும் ஏமாற்றியுள்ளார்.

அதன் பின்னார் அவர் பத்திரமாக கீழே இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. சீன மக்கள் சிலர் பொழுதுபோக்கிற்காக இது போன்ற ஆபத்து மிகுந்த செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது பாதுகாப்பு கிடையாது என்றும் பொதுமக்களுக்கும் இது இடையூறு ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகில் உள்ள பலர் இது போன்ற ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். அதிலும் கடந்த சில வருடங்களாக சீனாவில் இது போன்ற ஆபத்தான செயல்கள் அதிகம் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments