ரஷ்ய ஜனாதிபதியை விமர்சித்த அரசியல்வாதிக்கு நேர்ந்த கதி: உக்ரைனில் பரபரப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

முன்னாள் ரஷ்ய அரசியல்வாதியும் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் தீவிர விமர்சகருமான Denis Voronenkov அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

உக்ரைன் தலைநகர் கியெவ்வில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ரஷ்ய ஜனதிபதியுடனான மோதல் போக்கு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கிய டெனிஸ் Voronenkov கடந்த ஆண்டு உக்ரைனில் தஞ்சம் புகுந்திருந்தார்.

உக்ரைன் உள்ளூர் நேரப்படி மதிய வேளையில் ஹொட்டேல் ஒன்றின் அருகாமையில் வைத்து அடையாளம் தெரியாத மர்ம நபரால் டெனிஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த தாக்குதலில் டெனிசின் பாதுகாவலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி புட்டினால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என பலமுறை டெனிஸ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு உக்ரைன் நாட்டிற்கு குடிபெயர்ந்தார்.

உக்ரைன் குடியுரிமை பெற்றிருந்த டெனிஸ் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்சபை உறுப்பினராகவும் இருந்தார்.

45 வயதாகும் டெனிஸ் பாடகியான தமது மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். உக்ரைனில் குடியேறியது முதல் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் குறித்து விமர்சிப்பதை அறவே நிறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் டெனிஸ் Voronenkov மர்ம நபரால் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளது உக்ரைனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments